நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது


ஒரு முறை எல்.சுப்ரமண்யம் [வயலின்] ஜாகிர் ஹுஸேன் [தபலா]
இவர்களுடன் கச்சேரிக்கு ஏதென்ஸ் செல்ல ஏற்பாடாகியிருந்தது.
விநாயாகராமைத் தவிர மற்ற இருவரும் முதலில் லண்டன் சென்று
ஒரு கச்சேரியை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் வருவதாகவும்,
விநாயகராம் நேரே இந்தியாவிலிருந்து ஏதென்ஸ் செல்வதென்றும்
ஏற்பாடு. அதன்படி விநாயகராம் முதலில் ஏதென்ஸ் சென்றார்.
அறையில் பொழுது போகாமல்,கடத்தையாவது வாசிக்கலாமென்று

Continue reading

பொட்டலத்தில் என்ன இருக்கிறது?


“”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை””

மகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும் பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா பிரபு அவர் .

புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று

தொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.

ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை,

Continue reading

Vadavambalam ஆத்மபோதேந்த்ராள்

காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி ஆத்மபோதேந்த்ராள்


ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்றஸ்வாமிநாதனும்,திண்டிவனம் அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள்!

பெரியவா விழுப்புரம் வரும் போதெல்லாம், விழுப்புரம் எல்லையில் உள்ள, பாப்பான்குளம் பாபுராவ் சத்ரத்தில்தான் தங்குவார். லக்ஷ்மிநாராயணனின் அப்பாதான், பெரியவாளுக்கு, விழுப்புரம் எல்லையிலேயே பூர்ணகும்ப மர்யாதை செய்து பாபுராவ் சத்ரத்திற்கு அழைத்துச் செல்வார். யானை, குதிரை, பஶுக்கள் எல்லாவற்றையும் கட்டி வைக்க, அங்கே பஹு வஸதி உண்டு.

ஒருநாள் லக்ஷ்மிநாராயணனையும் மற்றொரு பாரிஷதரையும் பெரியவா அழைத்தார்…..

“இங்கேர்ந்து…. ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்ல….வடவாம்பலம்-ன்னு ஒரு ஊர் இருக்கு! அங்க…. போயி….ஸுப்ரஹ்மண்ய ரெட்டியார்-ன்னு ஒத்தர் இருப்பார்….. அவரை… நா…. கூப்ட்டேன்னு சொல்லி…. கூட்டிண்டு வாங்கோ!…”

ரெண்டுபேரும் போய் ரெட்டியாரை ஸந்தித்து பெரியவா அழைப்பதாகச் சொன்னார்கள். அவர் நல்ல வஸதி படைத்தவர்.

“பெரியவங்க….. என்ன காரணத்துக்கு கூப்ட்டாருன்னு தெரியலியே…..”

உடனே பெரியவா முன் ஆஜரானார்!….

“இங்க இருக்கற தாஸில்தாரை அழைச்சிண்டு வாங்கோ……”

அப்போதெல்லாம் தாஸில்தார் என்பவர் கிட்டத்தட்ட ஒரு குட்டி கலெக்டர் மாதிரி! அந்த தாஸில்தார் கும்பகோணத்தை சேர்ந்த ப்ராஹ்மணர்!

பெரியவா அவரிடம் ஏதோ ஒரு இடத்தை பற்றி குறிப்பாக கேட்டார்……

“இந்த ஊர்ல என்ன விஸேஷம்-ன்னு….. ஒங்கிட்ட field-map வெச்சிண்டிருப்பியே! அதப்பாத்து சொல்லு பாப்போம்..”

அவர் முழிக்கவும், சிரித்துக் கொண்டே…. தானே அந்த ஊரின் விஸேஷத்தை சொல்ல ஆரம்பித்தார்…..
“200 வர்ஷத்துக்கு முன்னால….. இந்த பெண்ணையாறு வந்து….. இங்க… வடவாம்பலம் பக்கத்லதான் ஒடிண்டிருந்திருக்கு! நாளாவட்டத்ல… ஒதுங்கி ஒதுங்கி… இப்போ…. ரொம்ப தூ..ரம் தள்ளிப் போய்டுத்து! அதோட….. வடவாம்பலத்லதான்… ஆத்மபோதேந்த்ராள்..ன்னு நம்ம காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி… அவரோட அதிஷ்டானம் இருக்கு! ராமநாம ஸித்தாந்தம் பண்ணின ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ராளோட [கோவகுருதான் இவர்!…. அவரோடது ஒரு பீடம் கூட இருந்திருக்கு! லிங்கப்ரதிஷ்டை பண்ணி, அதிஷ்டானம் கட்டியிருந்தா! அதெல்லாம்….. வெள்ளம் அடிச்சிண்டு போய்டுத்து!.. தை பொறந்து….. அஞ்சு தேதி வரைக்கும்….. பெண்ணையாத்துல கங்கை வர்றதா…. ஐதீகம்! பெரிய திருவிழாவா ஆத்தங்கரைல கொண்டாடுவா!….”

“ஆனா…. இப்போ…. அந்த மாதிரி எந்த அதிஷ்டானமும் இருக்கறதா…. தெரியலியே பெரியவா…”

தாஸில்தார் சொன்னதும், பெரியவா பதிலேதும் சொல்லாமல் அவர்களுக்கு ப்ரஸாதம் குடுத்து அனுப்பிவிட்டார்.

திடீரென்று ஒருநாள்…. இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும்! நகரங்களில் கூட மின்வஸதி இல்லாத காலம் என்பதால், க்ராமத்தை பற்றிக் கேட்கவும் வேண்டுமா?….

பெரியவாளுடைய ‘சொடக்கில்‘ லக்ஷ்மிநாராயணனும், மற்றொரு பாரிஷதரும் முழித்துக் கொண்டனர்….

“எனக்கு இப்போவே…. வடவாம்பலத்துக்கு போகணும்! டார்ச் லைட்டை எடுத்துண்டு எங்கூட ரெண்டுபேரும் வாங்கோ!…”

அந்த அகாலத்தில், காலகாலனான பெரியவாளுடன் வடவாம்பலம் போனார்கள்! ராத்ரி 2 மணியளவில் வடவாம்பலத்தை அடைந்தார்கள். பெரியவா அந்த இருட்டில்…[நமக்குத்தான் இருட்டு!!] ஸரியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து…. அங்கு அமர்ந்து ஜபம் பண்ண ஆரம்பித்தார். விடிந்து நான்கு மணிக்கு…. நயனங்களை மெல்லத் திறந்தார்! எதுவுமே பேசவில்லை. மறுபடி நடந்து, ஸூர்யோதயம் ஆகும் முன்னால், முகாமுக்கு வந்துவிட்டார்!

Continue reading

அனுஷத்தின் அனுக்கிரஹம்

Anushathin Anugraham

 

Abhishekam (அனுஷத்தின் அனுக்கிரஹம்) 03.07.2016

Anushathin Anugraham Speach By Thiru Indra Soundar Rajan 03.07.2016

Abhishekam (அனுஷத்தின் அனுக்கிரஹம்) 03.07.2016

Anushathin Anugraham Speach By Thiru Indra Soundar Rajan 03.07.2016

Maha Sani Pradhosham 02.07.2016

சனிக்கிழமையன்று சிவபெருமான்..அமுதம் வருமுன் வந்த ஆலகால விஷத்தை விழுங்க...அம்மை..தொண்டையில் அவ்விஷம் நிற்க விரலால் அழுத்த..விஷத்தால் அயர்ந்திருந்த சிவன்..நலமாய் எழுந்து..நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் ஆடிய அவ்வேளை..சனிக்கிழமை மாலை..அந்தி வேளை என்பதால்..சனிக்கிழமைகளில் வரும் ப்ரதோஷம் மஹா ப்ரதோஷம் ஆயிற்று..

Pradosham 02.07.2016

Orikkai Pradosham 02.07.2016

Moolam Live Telecast 27.04.2016

SANYASA DEEKSHA NAKSHATHRA DAY
Celebration Every Month and Sanyasa Deeksha Jayanthi every year for
Pujya Shri Chandrasekarendra Saraswathi Mahaswamigal,
The 68th Sankaracharya of Sri Kanchi Kamakoti Peetam,
Kancheepuram, Tamilnadu, India.

Moolam Live Telecast (Mutt)

Moolam Live Telecast (Orikkai)

Kaveri Snanam

His Holiness Pujyasri PudhuPeriyava Kaveri Snanam on 21Feb2016 Morning Hours

Kaveri Harathi by HisHoliness Pujyashri Bala Periyava on 21Feb2016 Evening 6:15

ஸ்நானம்

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக் காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

Continue reading