பெரியவா சொன்னது

periyava_kalki_19781பெரியவா சொன்னது:

கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும்.

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன.

சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.

அன்னாபிஷேகம்

ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பு
கட்டுரை 😕
சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. Continue reading

சித்தம் போக்கு..சிவன் போக்கு!

தேனம்பாக்கம் சிவாஸ்தானம்..பெரியவா முகாம்.
பெரியவா ஜன்னல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடம். பெரியவாளுக்கு அருகில் அணுக்கத் தொண்டர்கள். அவர்களில் ஒருவன் என் மருமான் நாராயணன். ”நாராயணா” என இயல்பாகவே பெரியவா குரல் ஒலிக்கிறது. ”ஏன் ”என்ற பதில் குரம் என் மருமான் நாராயணனிடமிருந்து வருகிறது. விஷ்ணுபுரம் சாது நாராயணன் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
”அட..நீ இங்கேதான் இருக்கியா?” என்று புன்முறுவலுடன் பெரியவா கேட்கிறார்கள்.
”உனக்கு இதயம் பற்றித்தெரியுமா?” ”கடிகாரம் மாதிரி அது டக்..டக் என்று அடித்துக் கொள்கிறதே கன கணக்காய்! அது எப்படி?”
பெரியவா எந்தப் பேச்சுக்கு அடி போடுகிறார் என்று தெரியாமல் அவன் மௌனம் சாதிக்கிறான்.
”கடிகாரத்தைப் பார்த்து இதயம் ஓடுகிறதா? அல்லது இதயத்தைப் பார்த்து கடிகாரம் கண்டுபிடித்தார்களா?”
”கடிகாரத்தில் பல்சக்கரம் பழுதானால் துடிப்பு தடுமாறிப்போகிறது;அது போல் இதயத் துடிப்பும் அப்படி தடுமாறுவது உண்டாமே..உனக்குத் தெரியுமோ?” ”ஆமாம்..இப்படி ஒரு இதயக் கோளாறு ஏற்படுவதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறோம்”..பலர் சேர்ந்து கோரஸாகக் குரல்!
அப்போதைக்கு அந்தப் பேச்சு நின்றுவிடுகிறது.
நாராயணன் சென்னை செல்லும் பஸ்ஸில் அமர்கிறான்..பக்கத்தில் அமர்பவர் ”சென்னைக்கா?” என்று கேட்கிறார்.
கண்டக்டர் வரும்போது இவனுக்கும் சேர்த்து டிக்கட் வாங்க முனைகிறார். இவன் ஏன் அவர் தனக்காக வாங்க வேண்டுமென மறுத்துவிடுகிறான்.
;;நான் ஒரு இதய டாக்டர்..பெரியவா உங்களிடம் பேசியதைக் கேட்டேன். நீங்கள் சொன்னால் நான் ECG கருவியோது வந்து பெரியவா அநுமதி தந்தால் முறைப்படி டெஸ்ட் செய்கிறேன்” என்றார்.
”சித்தம் போக்கு சிவன் போக்கு” என நினைத்து மறுத்து விடுகிறான் நாராயணன்.
ஆனால் டாக்டர் விடுவதாயில்லை.”.நாம் முயன்று பார்க்கலாமே” என்று சொல்லி , மறு நாள் கருவியோடு வந்து விடுகிறார்.
அன்று குருவாரம்..என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் வந்த டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து”புறப்படு” என்கிறான் நாராயணன்.

Continue reading

வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?

IMG-20151025-WA0038

 

இந்தப் பெயரை ஸ்ரீபெரீவாளின் திருவாக்கால் கேட்ட அத்தருணத்திற்கு முன்வரையிலும் நான் கேள்வியுற்றதில்லை…
ஒருநாள் நண்பகல்..
ஸ்ரீபெரீவாளின் திருமுன்பு நரைத்த பெரும் மீசையுடன், தன் வற்றலான தேகத்தை மறைக்கும் கசங்கிய சரிகைச் சட்டையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்..
அவர் அருகில் ஒர் சிறுவன்.. அவனுக்கு சுமார் பன்னிரண்டு பிராயம் இருக்கலாம்..
அம்முதியவர் கையில் ஒரு மரப் பெட்டி இருந்தது.. பெட்டியில் மங்கலான எழுத்தில் இனிஷியல் காணப்பட்டது..
ஸ்ரீபெரீவா அந்த முதியவருக்கு மிகச் சமீபத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. அம்முதியவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டேயிருந்தார்..
ஸ்ரீபெரீவா, அவரின் மனக்குறைகளை நிதானமாகக் கேட்டுக் கொண்டார்கள்..
தன்னுடைய வாழ்க்கைத் துன்பங்களை ஸ்ரீபெரீவா ஸன்னதியில் கொட்டித் தீர்த்துவிடவேணுமென்ற தீர்மானத்துடன் அவர் வந்திருப்பது போலிருந்தது..
ஒருவழியாக அம்முதியவர் பேசி முடித்தார்..
சிறிது அமைதி..
அதுவரை ஏதும் பேசாமல் இருந்த ஸ்ரீபெரீவா, அம்முதியவருடன் வந்த சிறுவனைப் பார்த்து “வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்..
உடனே அச்சிறுவன் தன்னுடைய தாத்தாவை நோக்கிக் கை காட்டினான்…
அம்முதியவர்தான் உடையார்பாளையம் ராஜா..

Continue reading

மகா பெரியவா எங்கேயிருக்கா?

IMG-20151019-WA0015

 

 

மதுரை மணி ஐயர் தியாகராயநகரில் ராதாகிருஷ்ணன் தெரு, ஸ்ரீ அனந்தானந்த சுவாமிகளின் பூர்வாச்ரம மாப்பிள்ளையின் இல்லம். வெளி வராந்தரத் திண்ணையில் பெரியவா அமர்ந்திருக்க, மதுரை மணி ஐயர் தேவகானம் பொழிந்து கொண்டிருந்தார்.
பெரியவா, சுளை உரிக்கப்பட்ட பெரிய சாத்துக்குடி மூடியொன்றைக் கையில் வைத்துக் கொண்டு பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.
பாடி முடித்ததும் மதுரை மணி ஐயர், ‘இத்தனை நேரம் யார் தாளம் போட்டது?’ என்று கேட்டார். ‘பெரியவா தான் தாளம் போட்டார்’ என்று ஒருவர் கூறியதும், ‘அப்படியா! இத்தனை லயஞானத்தோட யார் அற்புதமா தாளம் போட்டுண்டிருக்கான்னு நினைச்சுண்டேன், என்ன பாக்கியம் பண்ணியிருக்கேனோ? பெரியவாளே இன்னிக்கு என் பாட்டுக்குத் தாளம் போட்டிருக்கார். பெரியவா எங்கேயிருக்கா? என்று மணிஐயர் கேட்க, ‘இதோ உன் எதிர்லதான் இருக்கேம்பா!’ என்று பெரியவா அன்பொழுகக் கூறினார்.
‘என் தெய்வத்தைத் தரிசனம் பண்ணமுடியலையே! பார்வை போயிடுத்தே… பரமேஸ்வரா, கைலாசபதே, கபாலீஸ்வரா!’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அவர் கதறிய போது சுற்றியிருந்தவர்கள் கண்ணீர் விட்டனர்.

பிரஸ்தான த்ரயம்

IMG-20151025-WA0010[1]பெரியவா சரணம்

மஹா பெரியவாவுக்கு கைங்கர்யம் பண்ணின பட்டாபி சிலிர்ப்புடன் கூறுகிறார்:

ஒரு நாள், திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துல இருந்து 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தார். இரண்டு சாகுபடி செய்யும் அளவுக்கு நிலபுலன்கள் அவருக்கு! தமிழ் மீது அலாதிப் பிரியம்! ஆனாலும் சமஸ்கிருதமும் கத்துண்டாராம்!

பகவத்கீதை, உபநிஷத் வேதம் இந்த மூணையும் ‘பிரஸ்தான த்ரயம்’னு சொல்லுவா. ஆச்சார்யாள் இதற்கு பாஷ்யம் கூட செய்திருக்கிறார். முழுக்க முழுக்க அத்வைத கருத்துகளை விவரிக்கிற பாஷ்யம் அது!

அதையெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் செய்து எடுத்துண்டு வந்திருந்தார் அந்தப் பெரியவர். பெரியவாளை நமஸ்காரம் செய்துட்டு , ‘இந்தப் புஸ்தகத்தை ஐயா தான் வெளியிடணுமுங்க’ என்று பெரியவாளைக் காட்டிச் சொன்னார்.

Continue reading

நவராத்திரி பூஜைக்கு

நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தையை

…கூட்டிண்டு வா-பெரியவா.
சொன்னவர்-மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ம்கன் பாலசுப்ரமணியம்- மஸ்கட்

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார்.

ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டு ஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.
அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.
அப்பா ஸ்ரீ பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி ‘அப்படியா’ என்று கேட்டாராம். ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.


ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.
இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா
இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,
இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது
ஸ்ரீ பெரியவா சரணம்

Maha Sani Pradosham

மஹா சனி பிரதோஷம் 10.10.2015 (4.30pm to 7.30pm)
வரும் சனிக்கழமை (10.10.2015) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்
எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும்
காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நேரில் செல்ல முடியாதவர்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டுகளிக்கலாம் இதை மற்றவருக்கு தெரிவிக்கவும்.

ஸ்ரீ மகாபெரியவா அதிஷ்டானம் / பிருந்தாவனம்

ஸ்ரீ மகாபெரியவா ஓரிக்கை / மணிமண்டபம்

Sri Sivan SAR Jayanthi Mahotsavam

Sri Sivan SAR Jayanthi Mahotsavam

| Abhishekam |

Live Web Streaming

Sri Sivan SAR Jayanthi Mahotsavam

| Evening |

Live Web Streaming