Kaveri Snanam

His Holiness Pujyasri PudhuPeriyava Kaveri Snanam on 21Feb2016 Morning Hours

Kaveri Harathi by HisHoliness Pujyashri Bala Periyava on 21Feb2016 Evening 6:15

ஸ்நானம்

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக் காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

Continue reading

Sani Pradosham 20.02.2016

மஹா சனி பிரதோஷம் 20.02.2016 (4.30pm to 7.30pm)


IMG-20160206 Aவரும் சனிக்கழமை (20.02.2016) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்

எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு

Continue reading