‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .

‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங் கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசா ரம் செய்துவிட் டு, அங்கிருந்து அவரை மூர்த்தியி ல் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகு ண்டத்தில் இருக்கிறார் என்பது போல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்க ள் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால் ‘ பரம பதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகு ண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என் று அர்த்தம். வைகுண்டத்தில் இருக் கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத் தமன்’ என்று சொல்வது ண்டு. ‘புருஷோ த்தமன்’ என்ற வார்த் தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத் தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்த ம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தம ன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார் கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல் லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த் தையில் ‘ஸ்வம்’ என்பத ற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடை மை என்று இலக்கணமாகச் சொல் லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம் தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத் தாக உடையவர்’ என்று அர்த்தம்.

மங்களாரம்பம்

மங்களாரம்பம் -பெரிய இடத்துப் பிள்ளை
பாட்டனார் பெருமை

ஒரு குழந்தையிடம் நாம் மரியாதை காட்டும்படி இருக்குமானால், “அது யாரகத்துக் குழந்தை தெரியுமா? இன்னர் அதற்கு அப்பா, இன்னார் தாத்தா “என்று’ப்ரவரம்’ சொல்வார்கள். இப்படிப் பிள்ளையாருக்கு ப்ரவரம் சொல்லி ஒரு ச்லோகம் உண்டு.

மாதமஹ மஹாசைலம்
மஹஸ்தத் அபிதாமஹம்மி
காரணம் ஜகதாம் வந்தே
கண்டாதுபரி வாரணம்மிமி
ப்ரவத்தில் கொள்ளுத்தாத்தா பேரும் சொல்லணும். இங்கே அப்படி இல்லை.
தாத்தாவோடு நின்றுவிடுகிறது.

”விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” பூர்வ பாகத்தில் வ்யாஸரைப் பற்றி வரும் ஒரு ச்லோகத்தில் தான் அவருடைய கொள்ளுத் தாத்தாவான வஸிஷ்டரில் ஆரம்பித்து, பிள்ளை சுகாரசார்யாள்வரையில் வரிசையாய் எல்லார் பேரும் சொல்லியிருக்கிறது. சுகர் ப்ரம்மசாரி. இல்லாவிட்டால் அவருடைய பிள்ளை, பேரன் என்றெல்லாமும் சொல்லிக்கொண்டே போயிருக்குமோ என்னவோ? சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே? இதனாலும் வ்யாஸர் பேச்சு வந்ததில் ஸந்தோஷந்தான்.Continue reading

ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?

“பெரியவாளின் அற்புத விளக்கம்”‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’
கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்
அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.
முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.
எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.
(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)
அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.
‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’
என்று முதல் கேள்வி.
‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’
அதுதான் பல்லவி.
அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

Continue reading

”கிளம்பியாச்சா ஊருக்கு?

”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!”-பெரியவா
,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”)

சொன்னவர்-பட்டாபி சார்

திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.
வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.
சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!
காஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.

Continue reading

இது தவனப் பூவின் குச்சி.

“இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும்,
வைத்துக்கொள்”-காஞ்சி மகாப்பெரியவர்
வலையில் படித்தது.
“””சார்! என் பர்சில் தவனப்பூவின் குச்சி இருக்கும். அது
காஞ்சி மடத்தில் மகாபெரியவர் எனக்கு அளித்த பிரசாதம்,”
காஞ்சி சங்கரமடத்தில், மகாப்பெரியவர் பக்தர்களுக்கு வழக்கம் போல் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சுமங்கலி வந்தார். அவர் மகாபெரியவரிடம் ஆசி பெற்றார்.
பெரியவர் அவருக்கு பிரசாதம் வழங்கிய போது, அதில் பல பூக்கள் கலந்திருந்தன. அதில் “தவனம்’ என்ற பூவின் குச்சி சேர்ந்திருந்தது. இந்த பூவை தென்மாவட்டங்களில் “மரிக்கொழுந்து’ என்பர். அதுபற்றி அறியாத அந்தப்பெண், பெரியவரிடம், “”சுவாமி! இது என்னவென்று எனக்கு தெரியவில்லையே!” என்றார்.
“”இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும், வைத்துக்கொள்,” என்றார் பெரியவர்.
அந்தப் பெண்ணும் பயபக்தியோடு அதைத் தன் பர்சில் வைத்துக் கொண்டார். பின், அந்தப்பெண் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களையெல்லாம் தரிசித்து விட்டு, திருநெல்வேலி செல்லும் பஸ்சில் ஏறினார்.
பஸ் சென்று கொண்டிருந்த போது தான், தனது பர்ஸ் காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது. உடனே, அவர் கண்டக்டரிடம் பர்ஸ் காணாமல் போனது பற்றி புகார் தெரிவித்தார். அவரது பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் அமைந்திருந்தது.

Continue reading

“மஹா பெரியவாளின் பொன் வரிகள்”

‘மதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா?’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே! நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு’ என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.

இப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம்! லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும்? அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை வராது.

Continue reading

பெரியவா கடாக்‌ஷம்.

பெரியவா சரணம்.

பாருங்களேன்… பரந்தாமன் தரிசனத்தை! மனதினில் எல்லையில்லாத ஆனந்தத்தை நொறைக்கும் இந்த அற்புத தரிசனத்தை இன்றைய தினம் காணும் பாக்கியத்தை அடியேன் பெற உதவிய Kumaran Kkls க்கு ஆத்மார்த்தமான நன்றி கூறி யாம் பெற்ற இன்பத்தை உங்கள் அனைவரோடும் பகிர்வதிலும் கூட மனம் நிறைகிறது.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆதியன் தரிசனம் ஆனந்தமே
ஜோதியில் நாயகன் தரிசனமே
சோமனின் அருள்தனை தந்திடுதே

ஆனந்தம்….

இருள்தனை கலைந்திடும் அருளொளியே
இகபர சுகமதில் எழில்தருமே
மனமதில் நிறைத்திடும் பக்தியிலே
மநமதில் சரண்புக வேண்டிடுதே

ஆனந்தம்….

மறைதரும் ஞானமும் கூடிடுதே
மருந்தென குருவருள் காத்திடுதே
குவலயம் அறமதில் வளர்ந்திடுதே
குலகுரு சங்கரன் அருள்தனிலே

ஆனந்தம்….

குரு கடாக்‌ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.

சங்கர கோஷத்தோடு இந்த தரிசனத்தை அனைவரும் காண விழையுங்கள்.

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்

“1387 ரூபாய் அனுப்பு “

av_9_right_hand_blessing_vilva_on_head
அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.

திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.

உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.

“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.

Continue reading

சங்கீதமும் சமையலும்

(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !)
(வேதபுரி)
சொன்னவர்;.வேதபுரி
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்….
(மறுபதிவு)

Continue reading