பெரியவா கடாக்‌ஷம்.

பெரியவா சரணம்.

பாருங்களேன்… பரந்தாமன் தரிசனத்தை! மனதினில் எல்லையில்லாத ஆனந்தத்தை நொறைக்கும் இந்த அற்புத தரிசனத்தை இன்றைய தினம் காணும் பாக்கியத்தை அடியேன் பெற உதவிய Kumaran Kkls க்கு ஆத்மார்த்தமான நன்றி கூறி யாம் பெற்ற இன்பத்தை உங்கள் அனைவரோடும் பகிர்வதிலும் கூட மனம் நிறைகிறது.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆதியன் தரிசனம் ஆனந்தமே
ஜோதியில் நாயகன் தரிசனமே
சோமனின் அருள்தனை தந்திடுதே

ஆனந்தம்….

இருள்தனை கலைந்திடும் அருளொளியே
இகபர சுகமதில் எழில்தருமே
மனமதில் நிறைத்திடும் பக்தியிலே
மநமதில் சரண்புக வேண்டிடுதே

ஆனந்தம்….

மறைதரும் ஞானமும் கூடிடுதே
மருந்தென குருவருள் காத்திடுதே
குவலயம் அறமதில் வளர்ந்திடுதே
குலகுரு சங்கரன் அருள்தனிலே

ஆனந்தம்….

குரு கடாக்‌ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.

சங்கர கோஷத்தோடு இந்த தரிசனத்தை அனைவரும் காண விழையுங்கள்.

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்