Sani Pradosham 06.02.2016 & 20.02.2016

மஹா சனி பிரதோஷம் 06.02.2016 & 20.02.2016 (4.30pm to 7.30pm)

DSC_0348 Aவரும் சனிக்கழமை (06.02.2016) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்
எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்
அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை
(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு
பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்
(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,
முந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்
போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு

Continue reading

ஸ்ரீ பாலு மாமா

காஞ்சி ஸ்ரீ மடத்தில் 40வருட காலம் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ பாலு மாமா, மற்றும் ஈயெசை பாலு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ பாலு மாமா அவர்கள் சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டு அன்று முதல் சுவாமிநாத இந்த்ர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். அவரின் கடைசி நேர நேர் அலை நிகழ்சிகள். அனைவரும் மஹா சுவாமிகளையும் ஸ்ரீ பாலு சுவாமிகளையும் மனதார நமஸ்கரிப்போம்.

அவிட்டம் தங்க ரதம்

Grand Gala Inauguration of Avittam Nakshathram Golden Chariot for Universal God Sri Sri Kanchi Mahaswamigal ( Sri Sri Maha Periyava ) on account of Janma Nakshathram of sri sri Jeyandra Saraswathi Swamigal 69th Pontiff Of Kanchi Kamakoti Peetam. Sri Sri Periyava has Given Consent to do Golden Chariot Rathothsavam on His Every Avittam Nakshathram Day Of Every Month Like we do Moola Nakshthram Day.As usual Live Telecast of Golden Chariot will be done on the Avittam Nakshathram Day From 6.00PM

திவ்வியப் பிரதோஷம்!

23.11.2015 அன்று திவ்வியப் பிரதோஷம்!

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது, திவ்வியப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக- ஆராதனை செய்தால் பூர்வ ஜென்ம வினை முழுவ தும் நீங்கும்.

இதனை சோமப் பிரதோஷம் என்றும் கூறுவர். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

Pradosham
Live Video from
Kanchi Mahaswamigal Adhistanam/Brindavanam
Between 4.30 P.M. and 8.00 P.M.

Pradosham 23.11.2015

Pradosham
Live Video from
Orikkai / Manimandapam
Between 4.30 P.M. and 8.00 P.M.

Orikkai Pradosham 23.11.2015

பெரியவா சொன்னது

periyava_kalki_19781பெரியவா சொன்னது:

கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும்.

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன.

சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.

அன்னாபிஷேகம்

ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பு
கட்டுரை 😕
சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. Continue reading