அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி


DSC_0348 Aஅலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது; சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது. மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள்,பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.” 
உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.

‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்தசதாசிவ சங்கர’

உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?” என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.

ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான் !!!